பஞ்சாப், அரியானா, உ.பி. மாநில விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளுக்காக டில்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக டில்லி நோக்கி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தடியடியும் நடத்தப்பட்டது.
விவசாயிகள் வரும் வழியில் தடுப்புகள் போடப்பட்டதுடன், வாகனங்களில் வர முடியாதபடி சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எதிரான இந்த செயல்களை, வேளாண் விஞ்ஞானியும், அண்மையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டவருமான எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் கண்டித்து உள்ளார்.
இது குறித்து மதுரா கூறும்போது, விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல, கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று கூறி உள்ளார்.