நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடி இந்தியாவில் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை ஐஐடி 3வது இடமும், டில்லி ஐஐடி 4வது இடமும், கான்பூர் ஐஐடி 5வது இடமும் பிடித்துள்ளது. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
