மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா, மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் மாடித்தோட்டம் அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், விதைப்பு முறைகள், செடி வளர்ப்பதற்கான பைகள் (மண் கலவை) தயார் செய்யும் முறை, நீர் பாய்ச்சல் மற்றும் உரம் இடுதல், முட்டுக்கொடுத்தல், களை செடிகளைக் கட்டுப்படுத்துதல், இரசாயன மருந்துகள் அல்லாமல் இயற்கையாக பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரவீன், ராஜவேல் உட்பட கலந்துக் கொண்டனர். மேலும் இதில்
மாடித் தோட்டம் தொகுப்பு ஒன்றின் விலை ரூ 900, மானியம் 50 சதவீதம் போக ரூ. 450 மட்டும் செலுத்தி மாடித்தோட்ட தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும், சந்தேகங்களுக்கு அம்மாபேட்டை வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்புக் கொள்ளலாம் என்றும், மாடித்தோட்ட தொகுப்பினை பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டிய இணையதள இணைப்பு
https://tnhorticulture.tn.gov.in/kit_new/Kit_Registration எனவும் தெரிவிக்கப் பட்டது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/07/form.jpg)