மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கும் அன்று தேர்தல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி எண்ணப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்க காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது.