விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.12 வருடங்களுக்கு முன்பு உருவாக்கி இப்போது வெளியாகியிருக்கும் படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் விஷால், சந்தானம், வர லட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பல நாள் காத்திருப்பதற்கு மத்தியில் இப்படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் , நடிகர் விஷால் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், கடவுளுக்கு நன்றி. இறுதியாக மதகஜராஜா திரையரங்குகளில் வந்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது. கூட்டம் நிறைந்த தியேட்டரைப் பார்ப்பது ஒரு நடிகரை கடினமாக உழைக்க வைக்கிறது. என் அன்பான பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. குடும்பமாகக் கூட்டம் தியேட்டருக்கு வருவதைப் பார்ப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாக தெரிகிறது என தெரிவித்துள்ளார். மேலும், நன்றி சுந்தர் சார்! இந்த தருணத்திற்காக ஒவ்வொரு வருடமும் காத்திருந்தேன். சோழ பரம்பரையில் இன்னொரு எம்.எல்.ஏ., 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஒரு அதிசயம்தான் என பதிவிட்டுள்ளார்.