புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஜப்பான் முன்னணியில் உள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் பின்பற்றும் சிகிச்சை நெறிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவி வருகிறது” இதைத்தொடர்ந்து இந்த திட்டம் குறித்து அறிந்து வர தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜப்பான் புறப்பட்டு சென்றனர்.
ஜப்பானில் புற்றுநோய் மேலாண்மையை கண்காணித்து தமிழகத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்க இந்த குழுவினர் ஜப்பான் சென்று உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள Konoike Medical co.,Ltd நிறுவனத்தின் “Tokyo sterilisation centre”ன் செயல்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
முன்னதாக இன்று காலையிலும் டோக்கியோ நகரில் மா.சு நடைபயிற்சி மேற்கொண்டார். அங்கும் சிறிது தூரம் ஓடினார்.