மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது இன்று ஒரு விமானம் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சேதமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களுடன் ரேவா போலீசார் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் விமான உயிரிழந்தார. ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்கான ரோவ பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என ரேவாக எஸ்பி நவ்நீத் பாசின் தெரிவித்தார்.