Skip to content

மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஈபிஎஸ்.. கவர்னர் ரவி அஞ்சலி..

  • by Authour

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி ஆவர். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அது மட்டும்மல்லாமல், வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இந்த சூழலில் அவரது மறைவு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல்–வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் அடுத்தடுத்த அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *