விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ.நெடுமாறன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழ் தேசிய பேரியக்கத்தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பதை தற்போது அறிவிக்க இயலாது. பிரபாகரன் இந்தியாவுக்கு எதிரானவர் என சிங்கள அரசு கட்டமைத்து விட்டது. பிரபாகரன் விரைவில் பொது இடங்களுக்கு வருவார். பிரபாகரன் மனைவி, மற்றும் மகளும் நலமாக உள்ளனர்.
சர்வதேச சூழல் சாதகமாக இருப்பதாலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும் இப்போது இந்த அறிவிப்பை வெளியிடுகிேறாம். பிரபாகரனுடன் தொடர்பில் உள்ளோம். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரபாகரன் அனுமதியின் பேரிலேயே இந்த தகவலை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது கவிஞர் காசி ஆனந்தனும் உடனிருந்தார்.