வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே இன்று அதிகாலை 5.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் மேல் நிலவுகிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
