Skip to content

வாடகை காதலர்கள்… ஜப்பான் அரசு தொடங்கிய புதிய தொழில்… நல்ல வரவேற்பு

ஒரு காலத்தில் கிராமங்களில் வாடகை சைக்கிள் கடை தொழில் பிரபலம்.  5 சைக்கிள்களை வாடகைக்கு விட்டால் தினமும் 25 ரூபாய் வரை சம்பாதிப்பார்கள்.  இது பெரிய வருமானமாக அப்போது கருதப்பட்டது. இன்று பைக், கார் போன்ற வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.

ஆனால் ஜப்பானில் வித்தியாசமாக வாடகைக்கு காதல் ஜோடியை  எடுத்துக்கொள்ளலாம்.  தனிமையில் இருக்கும் ஆண் – பெண்ணை  வாடகைக்கு எடுக்கலாம். பெண்-  ஆணை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் வாடகையும் உண்டு.

வடிவேல் வாடகை சைக்களி எடுத்துக்கொண்டு  பணம் செலுத்தாமல் ஏமாற்றுவது போல இதில் ஏமாற்ற முடியாது.  முதலிலேயே ஆன் லைனில் பணம் செலுத்தினால் தான் வாடகைக்கு ஜோடி கிடைக்கும்.

இந்த புதிய திட்டத்திற்கு  நல்ல வரவேற்பு உள்ளது. அரசே இதனை கொண்டு வந்து உள்ளது. ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை  அரசு கொண்டுவந்துள்ளது.  ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டும்.  உங்களுக்கான இணையை தேர்வு செய்யக் கூடுதலாக ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். வாடகைக்கு இருக்கும் இணையை நேரடியாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது. அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.

வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!