அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் -கொளஞ்சியம் தம்பதியினரின் ஒரே மகள் ரம்யா( 23 )எம்ஏ பட்டதாரியான இவருக்கும் அப்பகுதியில் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்த மங்கப்பட்டியைச் சேர்ந்த நடராஜ்(30 )என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரம்யா புகாரளித்தார். அதன் பின் போலீசாரின் அறிவுரையின்படி, ஜெயங்கொண்டம் மாரியம்மன் கோவிலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு திருச்சி துறையூர் ,மங்கப்பட்டிக்கு குடித்தனம் வந்த தம்பதியினரிடம் இடையே நடராஜின் பெற்றோர் தொந்தரவு செய்தனர் , தனது கணவரை தன்னிடமிருந்து பிரித்து வைப்பதாகவும் , ரம்யா உப்பிலியபுரம் காவல் நிலையத்திலும் , முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை கணவரை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரியும் தனது பெற்றோருடன் வந்து நேற்று உப்பிலியபுரம் காவல் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து முன்னறிவிப்பின்றி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
புகாரின் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உப்பிலியபுரம் போலீசார் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றார்.