திருச்சி மேல கல்கண்டார்கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவருடைய மூத்த மகள் அகல்யா. இவர் மேல கல்கண்டார்கோட்டை நடன கலை தெருவை சேர்ந்த மாதவராஜ் என்பவரது மகன் ரவிச்சந்திரன் (23) என்பவரை காதலித்து வந்தார்.
இதனை அறிந்த அகல்யாவின் தந்தை கார்த்திகேயன் ரவிச்சந்திரனின் பெற்றோருக்கு காதல் விவகாரத்தை தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான விஜய சாரதி (43) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி கை மற்றும் செங்கல் ஆகியவற்றால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த கார்த்திகேயன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து ரவிச்சந்திரன் மற்றும் விஜய சாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.