கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் ஸ்ரீவட்சா (21) தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர் வகுப்பறையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த்தனர் இது பற்றி துடியலூர் காவல் நிலையம் மற்றும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவட்சா மதியம் மருத்துமனையில் இறந்து விட்டார். போலீசார் நடத்திய விசாரனையில் மாணவிக்கு பெற்றோர்கள் திருமண ஏற்ப்பாடு செய்து வந்ததாகவும் விருப்பம் இல்லாத மாணவி நேற்று காலை கல்லூரியில் இடைவேளை நேரத்தில் விஷம் குடித்ததும் தெரியவந்தது. நேற்று காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் காதல் தோல்வியால் இந்த முடிவுக்கு வந்தரா என்றும் துடியலூர்போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.