திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ். புதூரில் காதல் பிரச்சினையில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ் புதூர் பூசாரி கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழகன்.இவரது மகன் 27 வயதான திவாகர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த காதலில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவாகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.