மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன் வீட்டில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காதலனை கைது செய்து சிறையிலடைத்த போலீசார்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா செங்குடி கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்த பொன்னையன் மகள் சுகப்பிரியா (26). இவர் சென்னையில் நர்சு வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த அழகர்சாமியின் மகன் வினோத் (29). இவர் டாடா ஏசி வாகனம் ஓட்டுகிறார். வெளிநாடு சென்று வந்தவர். இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்ததால் இரண்டு முறை சுகப்பிரியா கருதரித்தார்.
வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சுகப்பிரியா கருகலைப்பு செய்துவிட்டாராம். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பம் மாதம் வினோத் , காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
வயிற்றில் குழந்தை வளருவதை தெரிவித்த சுகப்பிரியாவிடம் குழந்தை வளரட்டும். சில மாதங்கள் போனதும் வீட்டுக்கு முறைப்படி அழைத்து செல்கிறேன் என கூறி விட்டாராம். பின்னர் சத்து மாத்திரை என சில மாத்தி்ரைகளை சுகப்பிரியாவுக்கு கொடுத்து உள்ளார். அது கருகலைப்பு மாத்திரை . அதை காப்பிட்டதால் 3வது கருவும் கலைந்து விட்டது.
இந்த நிலையில் வினோத், இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தாராம். இதை அறிந்த சுகப்பிரியா மயிலாடுதுறை மகளிர் போலீசில் புகார் செய்தார். 2 மாதம் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் சுகப்பிரி நேற்று மாலை வினோத் வீட்டிற்கு சென்று வாசலில் அமர்ந்து தனக்கு வாழ்வு கிடைக்கும் வரை இங்கிருந்து சொல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வினோத் வீட்டில் இருந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்ட நிலையில் வீட்டின் வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக காவல்நிலையத்தில் வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியதன் பேரில் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் பெற்று சென்றதால் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்ததாக கூறிய போலீசார் இன்று சுகப்பிரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர்வினோத்தை கைது செய்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல் 420, 417 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
வினோத்தின் தாயார் பெரம்பூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் அத்து மீறி சுகப்பிரியா உள்பட 7 பேர் நுழைந்ததாக கூறி இருந்தார். இது தொடர்பாக சுகப்பிரியா , அவரது அண்ணன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.