திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த நாயனத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் .ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்
நாட்றம்பள்ளி அடுத்த கொண்டதனப்பள்ளி பகுதியை சேர்ந்த ரவி மகள் ராகவி. பர்கூரில் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார்
தமிழ்ச்செல்வன் ஓசூர் பகுதிக்கு வேலைக்காக பேருந்தில் செல்வார். அப்போது ராகவியும் அதே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறப்படும் நிலையில்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ராகவி தனது வீட்டில் காதலை சொல்ல வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் மார்ச் 15 ம் தேதி இருவரும் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டு
இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை செய்ததில் ராகவி கணவருடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து அவருடன் அனுப்பி வைத்தனர்