Skip to content
Home » 80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

புதுக்கவிதை போல காதலும்    எந்த இலக்கண விதிகளுக்கும் உட்படாது.   ஆனால்   இரண்டுமே மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை , எழுச்சியை ஏற்படுத்தும்.  அதனால் தான் காதலும், புதுக்கவிதையும் ஒன்று என்கிறார்கள்.  அதை துருவிதுருவிப்பார்த்தால் ஒன்றும் இருக்காது.  ஆனால்  சிலருக்கு கிளர்ச்சியை, மகிழ்ச்சியை தரும்.

அப்படித்தான் சீனாவில்  நடந்துள்ளது ஒரு விசித்திரமான காதல் திருமணம். அதாவது  23 வயது பெண், கிட்டத்தட்ட தன்னைவிட 4 மடங்கு வயது  மூத்தவரை  திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணம் நடந்துள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு:

சீ னாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது சியாபங் என்றஇளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இதையடுத்து திருமணம்செய்து கொள்ள முடிவெடுத்தபோது, சியாபங் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாபங், பெற்றோர் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் கனவு கண்டபடி, முதியவர் லீயை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த புதிய ஜோடியின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ,காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். அதற்காக இப்படியா? என வேதனைப்பட்டவர்களும் உண்டு, திருமணம் அவர்கள் தனிப்பட்ட உரிமை, அவர்கள் மனம் போல வாழ அவர்களுக்கு  எல்லா உரிமைகளும் உண்டு என வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!