Skip to content

காதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா….

  • by Authour

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். நடிகை தமன்னா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீப காலமாக அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். இவர்கள் காதலிப்பதாக தகவல் பரவுவதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம் தான்.

நடிகை தமன்னா இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாடினார். இதற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவுநேர பார்ட்டியில் ஜிகுஜிகுவென மின்னும் ரோஸ் நிற கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்தார் தமன்னா. புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹாப்பி நியூ இயர் என ஆனந்தத்தில் கத்தியபோது எடுத்த வீடியோவில் நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒருவரையொருவர் அன்புடன் அரவணைத்துக்கொள்வதைக் காணலாம். பர்பிள் மார்டினி என்ற பெயரில் கோவா உணவகத்தால் வீடியோ பகிரப்பட்டது. கட்டிப்பிடித்து லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தான் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!