Skip to content
Home » இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி (வயது 35). இவருக்கு விஜய் என்எவருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கார் ஷோரூம் ஒன்றில் புதிய கார் வாங்குவதற்காக குப்புசாமி, வடிவுக்கரசி இருவரும் சென்றுள்ளனர். அங்கு சசி என்ற நபர் கார் மாடல்கள் தற்போது குறைவாக உள்ளதாகவும், புதிய மாடல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதாக வடிவுக்கரசியின்  போன் நம்பரை வாங்கிக்கொண்டு  திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சசி போனில் அடிக்கடி வடிவுக்கரசியிடம் பேசினார். இதனால்  அவருக்கும் வடிவுக்கரசிக்கும் பழக்கம் ஏற்பட்டு  கள்ளக்காதல் ஏற்பட்டது.  சில மாதங்களுக்கு முன் வடிவுக்கரசி வீட்டை விட்டு வெளியேறி சசியுடன்  சென்றுவிட்டார். சசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வடிவுக்கரசி குடும்பத்தினரிடமிருந்து ரூ.30 லட்சம் வரை பணம் பெற்று சசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சசி மற்றும் வடிவுக்கரசி கரூரில் சவர்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடிவுக்கரசியின் அப்பா குப்புசாமி மற்றும் உறவினர்கள் அந்த கடைக்கு இன்று நேரில் சென்று தங்களது குடும்பத்தை சீரழித்து விட்டதாக தகராறு செய்தனர்.

சசியும் வாக்குவாதம் செய்து சண்டை போட்டார்.  குப்புசாமியின் உறவினர்கள் ஒன்று கூடி  சசியை பிடித்து தரதரவென இழுத்து வந்தனர். கரூர் மாநகராட்சிமேற்கு மடவளாகம் பகுதிககு கொண்டு வந்து சசிக்கு தர்ம அடி கொடுத்தனர்.  இதில் சசி மண்டை உடைந்தது.

 

தகவல் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் விரைந்து வந்து சசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குப்புசாமி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *