திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசிநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா ( 21). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இப்பெண் விக்னேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் மனமுடைந்த அப்பெண் காதலன் ஏமாற்றியதை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.