Skip to content
Home » காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகமது அப்பாஸ் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால் அவர் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார். காதல் தோல்வியால் விரக்தியடைந்த முகமது அப்பாஸ் அம்பேத்கர் நகரில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் எஸ்ஐ  ராஜகோபால் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!