Skip to content

திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும் சுமார் ஐந்து வருட காலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வர எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு தினங்களுக்கு

முன்பு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வெட்டுவானம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று பாதுகாப்பு கேட்டு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

அதன் பின்னர் எஸ்பி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் உதவியாய்வாளர் ராஜு காதல் ஜோடி இருவரையும் பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

error: Content is protected !!