கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார் இதற்கு கவுன்சிலர் சாந்தி அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கொலை மிரட்டல் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு, மின் துண்டிப்பு போன்றவற்றை துண்டித்ததாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்து இவர்கள் மீது புகார் அளித்தனர். ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கவுன்சிலர் சாந்தி காதல் ஜோடி சுமன் மற்றும் ஸ்ரீலேகா இருவரும் தங்களை அவமானப்படுத்தும் நோக்கமும் பணம் பறிக்கும் எண்ணமும் இருப்பதாகவும் தாங்கள் திமுகவில் பாரம்பரியமாக இருந்து வரும் குடும்பம் எனவும் குடிநீர் குழாய் மற்றும் மின் இணைப்பு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பொய்யான புகார் தங்கள் மீது சிலர் துணையோடு அளித்துள்ளதாக இதனால் மன உளச்சல் ஏற்பட்டதால்மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும் தங்கள் வழக்கறிஞர்கள் கொண்டு ஆனைமலை காவல் நிலையத்தில்இவர்கள் இருவருர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.