திருச்சியில் சமீபகாலமாக லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது .இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அருள்பாண்டியன் (வயது 22) என்ற வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் லாட்டரி சீட்டு வாங்கியதில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை விழுந்தது .அதை லாட்டரி வியாபாரிகள் தர மறுக்கின்றனர். ஏமாற்றி மிரட்டவும் செய்கின்றனர் என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தோணி பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தோணி பிரதீப் என்பவர் தலைமறைவாகி விட்டார். கைதான நபரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள், பணம், செல்போன், இருசக்கர வாகனம், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் லாட்டரி விற்ற நபர் கைது… சொகுசு கார்-பணம் பறிமுதல்…
- by Authour
