புதுச்சேரியில் உள்ள காமராஜர் சட்டமன்ற தொதொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். ஜோஸ் சார்லஸ் விரைவில் முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாக அவரது தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பாஜகவில் ஜோஸ் சார்லஸ் இணைந்துவிட்டார், அதனால் தான் இந்த விழாவில் இணைந்துவிட்டார் என புதுச்சேரி பாஜகவினர் கூறுகின்றனர். வெளியாகியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மருமகன் ஆதவா அர்ஜூனுக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடதக்கது..