வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் திருச்சி குட்செட் யார்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
தன்ராஜ், அருணகிரி, செல்வம், குழந்தைவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.