[12:27 PM, 5/23/2023] Ammuprabhu: சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். அதே நேரத்தில், ராகுல் தனது சகோதரி பிரியங்கா உடன் அன்பை செலுத்தும் வகையில், காஷ்மீரில் பனிக்கட்டிகளை வீசி விளையாடினார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகியது. கடந்த சில தினங்களுக்கு முன்,
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், அரசு பஸ்சில் மக்களுடன் பயணம் செய்து, ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் மக்களுடன் செல்பி எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் லாரி டிரைவர்கள் தங்கள் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை காங்., முன்னாள் எம்.பி ராகுல் கேட்டறிந்தார். பின்னர் அவர் லாரியில் பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லாரியில் ராகுல் பயணம் செய்த போட்டோவை, காங்கிரஸ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மக்கள் மத்தியில் ராகுல் என கருத்து பதிவிட்டுள்ளது. இதனை சமூகவலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்.