சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணவிரத போராட்டத்தில் ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்யவேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். ஆன்லைன் மணல் விற்பனை பதிவினை முறைப்படுத்த வேண்டும். தனியார் தண்ணீர் லோடு
ஏற்றும் வாகனங்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் சி.தனராஜ் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. வேலு, ராமசாமி, தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.