திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார். தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தார்.
புகழூர் தீயணைப்பு நிலைய வாகனம், தமிழ்நாடு காகித ஆலை தீயணைப்பு நிலைய வாகனம், கரூர் தீயணைப்பு நிலைய வாகனம் என 3 வாகனங்கள் அங்கு வந்து தீயை அணைத்தது. ஆனாலும் வைக்கோல் முழுவதும் நாசமானது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.