திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான லாரியில் தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டிச்சென்றார். காக்கங்கரை என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்து மின்சார கம்பியில் நார் உரசியதில் நார் லோடில் தீப்பற்றியது. லாரி வேகமாக சென்ற நிலையில் தீ மேலும் பரவி வேகமாக எரிந்தது. உடனடியாக
டிரைவர் ஆனந்தான் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி தப்பினார்.
ஆனந்தன் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தண்ணீரைப் பீச்சியடைத்து தீயணைத்தனர். அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியின் உள்ளே இருந்த நாரை அப்புறப்படுத்தினர்.