கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் போலீசார் தீ போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.