கும்பகோணத்தில் இருந்து பூ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒருமினி லாரி மயிலாடுதுறை நோக்கி சென்றது. கும்பகோணத்தை நோக்கி ஒரு தனியார் கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது. கோவிந்தபுரம் பகுதியில் இரு வாகனங்களும் நேருக்குநேருக்குநேர் மோதிக்கொண்டன. கல்லூரி பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததால் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடி லாரியில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பூ லாரியின் டிரைவரும், அவர் அருகில் இருந்த வாலிபரும் அந்த இடத்திலேயே இறந்தனர். கல்லூரி பஸ்சின் டிரைவர் மற்றும் 20 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடததினர்.