கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது கரூர் டு மதுரை பைபாஸ் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது. அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சின்னுசாமி லாரியின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானார்.
மதுரை பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த லாரியின் ஓட்டுனர் அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு. இந்நிலையில் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.