தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்றார்.
தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே சாலையில் உறுதிமொழி தனது பைக்கை திருப்பினார். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட் உறுதிமொழி , கணேசன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உறுதிமொழி இறந்தார். கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.