அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டவஏரிக்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மக சிவராத்திரி விழா, 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மயான கொள்ளை விழா முடிந்து, முத்து பல்லாக்கு விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. முத்து பல்லாக்கு விழாவையொட்டி, மலர்மாலைகளாக அலங்கரிக்கப்பட்ட பால விநாயகர், பாலமுருகன், பைரவர், நாகாத்தம்மன், பெரியநாயகி அம்மன் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள், கோயிலில் இருந்து பல்லாக்குகளில் உடையார்பாளையம்
முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முத்து பல்லாக்கில் வந்த சுவாமியை, வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.