மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த நகைகள் இன்னொரு மகளின் திருமணத்திற்காக சுகுமார் வாங்கி வைத்துள்ளார். அதை அப்படியே கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டனர். தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.