Skip to content
Home » எடப்பாடியின் ஈகோ பிரச்சனையில் 17 தொகுதிகள் போச்சு.. அதிமுக தொண்டர்கள் புலம்பல்..

எடப்பாடியின் ஈகோ பிரச்சனையில் 17 தொகுதிகள் போச்சு.. அதிமுக தொண்டர்கள் புலம்பல்..

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.  முன்னதாக இந்த தேர்தலில், திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டி நிலவியது.  வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும், 17 தொகுதிகளில் 2-ம் இடத்துக்கான வாய்ப்புள்ளது என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அதிமுகவினரும் சுமார் 10 இடங்களில் வெற்றி என கூறி வந்தனர். ஆனால், தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில், 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்ற, 2-ம் இடத்தை அதிமுக 28 தொகுதிகளையும், பாஜக 11 தொகுதிகளையும் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை பொறுத்தவரை, 22 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் நாம் தமிழர்கட்சியும், 11 தொகுதிகளில் அதிமுகவும் இடம்பிடித்தன. நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ள 6 தொகுதிகளில் 5-ல் பாஜக கூட்டணி கட்சிகளும், கன்னியாகுமரியில் அதிமுகவும் 4-வது இடத்தை பிடித்துள்ளன.  கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அந்த தேர்தலில் ஒரே ஒரு இடம் அதிமுகவுக்கு மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.  இந்நிலையில், இந்த தேர்தலுக்கு முன்னதாகவே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி தேமுதிகவையும், எஸ்டிபிஐ கட்சியையும் தன்னுடன் சேர்த்தது. இதனால், பாஜகவுடன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்தனர். அவர்களுடன் தொடர்ந்து குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவும் சேர்ந்தது. இதனால், மூன்று கூட்டணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.  இதில் அதிமுக, பாஜக பிளவு திமுகவின் வெற்றிக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால், 17 தொகுதிகளில் திமுகவை வீழ்த்தியிருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.பாஜக  கடைசி வரை அதிமுகவடன் கூட்டணி வரை வைத்துக்கொள்ள விரும்பியது. பல கட்டங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஆனால் கடைசி வரை எடப்பாடி விட்டுக்கொடுக்காமல் அடம்பிடித்து தனித்து போட்டியிட்டதால் அதிமுகவிற்கு ஒரு இடங்கள் கிடைக்கவில்லை என்பதால் அதிமுக தொண்டர்கள் சோர்வில் உள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!