மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் முடங்கின. மக்களவையில் இன்று 5ம் நாளாக எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பின. இதனால் சபையில் அமளி ஏற்பட்டதால், இன்று முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார் . இதனால் 5வது நாளாக இன்றும் மக்களவை முடங்கியது.