மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பாஜக உறுப்பினர் நிஷாந்த் துபே, காங்கிரஸ் மற்றும் ராகுல் குறித்து தெரிவித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை சாபநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதனால் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர். பாஜகவினர் எதிர் குரல் எழுப்பினர். இதனால் சபை அமளியானது. அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
