நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
கூட்டம் தொடங்கியதும் மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், 12 மணி வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக எதிர்கட்சி எம்.பிக்கள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது. மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும்.
மாநிலங்களவை இன்று கூடியதும் அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பினர். இதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர் குரல் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து மாநிலங்களவையை புதன்கிழமை காலை வரை அவைத்தலைவா் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் சபை கூட்டம் நடைபெறாது.
இதுபோல மக்களவையிலும் பிரச்னை எழுப்பபட்டதது. இதனைால் மக்களவையையும் சபாநாயகர் ஓம்பிர்லா நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.