மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு
தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
மேற்படி தேர்தல் தொடர்பான பயிற்சியில் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் குறித்தும், பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திடவும், தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்தும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி பயிற்சி வகுப்பில் 52 மண்டல அலுவலர்கள் மற்றும் 52 மண்டல காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)ச.பவானி மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.