Skip to content

மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…

தஞ்சை எம்.பி. முரசொலி  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில், அவர்களை குறைகளைக் கேட்டு, தீர்வு காண்பதற்காக தஞ்சாவூரில் 40 நாட்களில் மக்களவைத் தொகுதி அலுவலகம் அமைக்கப்படும் என்றார். மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை மேம்பாலத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதால், அதற்கு தீர்வு காணும் வகையில் தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலக பகுதியில் இருந்து டெம்பிள் டவர் பகுதியை இணைக்கும் விதமாக புதியபாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இணைக்கும் விதமாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பாரம்பரியமான யூனியன் கிளப்பில் மதுரையில் உள்ளதைப் போன்று, போட்டித் தேர்வர்களுக்கு பயன்தரும் வகையில் புத்தகப் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் தொகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!