Skip to content
Home » இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

  • by Senthil

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  சோனியா காந்தி, ராகுல், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) வெளியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்றை இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்ய இருந்தனர்.  ஆனால் அதிலும் சில மாற்றங்கள் செய்யலாம் என சில தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில்  இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாக இருந்த லோகோ   வெளியிடப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!