பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக நாளை மாலை பதவி ஏற்கிறது. டில்லியில் நடைபெறும் இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இதுவரை 2 லட்சம் மணி நேரம் ‘வந்தே பாரத் ’, ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா மேனன் சென்னை – விஜயவாடா, சென்னை – கோவை பிரிவில் தொடக்க நாள் முதலே ‘வந்தே பாரத்’ ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.