செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, அந்த நபருக்கு அங்கிருந்தவர்கள் சரமாரியாக அடி, உதை கொடுத்தனர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்த நபரால் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ரயிலை கடத்தி செல்ல முயன்றாரா, அவரது பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.