கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்,தேர்தல் நடத்தும் அலுவலர்
கரூர் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவல செல்வி முன்னிலையில் நடைபெற்றது.மொத்தம் 9 உறுப்பினர்களில் 4 திமுக உறுப்பினர்கள், 4 அதிமுக உறுப்பினர்கள் 1 பாஜக உறுப்பினர் இருந்தனர்.. இதில்
நான்காவது வார்டு திமுக உறுப்பினர் ஜோதிராஜ் என்பவர் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு எவரும் துணை தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திமுக உறுப்பினர் ஜோதிராஜ் என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்..
இதில் 2 வது வார்டு உறுப்பினர் சிவக்குமார்(அதிமுக),8 வது வார்டு உறுப்பினர் .சுசீலா(அதிமுக) ஆகியோர் இந்த தேர்தல் கூட்டத்தில் திமுக கட்சிக்கு ஆதரவாக பங்கேற்றனர்.