அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்;கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் என மொத்தம் 72 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 2,363 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 26,786 உறுப்பினர்கள் பெற்ற ரூ.49.06 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்றயை தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 18 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 206 உறுப்பினர்களுக்கு ரூ.77.08 லட்சம் மதிப்பில் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12.30 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளையும், செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.6.31 லட்சம் மதிப்பில் பயிர் கடனுக்கான காசோலைகளையும், பரணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் நடைமுறை மூலதனக் கடனுக்கான காசோலைகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .ம.ச.கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், சரக துணைப்பதிவாளர் ஜெயராமன், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அறப்பளி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.