நாமக்கல் கதிராநல்லுார் மினுக்கனத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(60). இவர் சௌதரன் லாரி சர்வீசில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். திருச்சி வாத்தலை தொடையூர் சோலை ஓட்டல் அருகே லாரியில் இருந்த மூட்டைகளை அவர் இறக்கி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்தது. லாரியின் மேலிருந்து கீழே அவர் விழுந்துள்ளார். அவர் மீது மூட்டைகள் சரிந்துள்ளன. இதனை மூட்டைகளுக்குள் சிக்கி இருந்த அவர் மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அதன் பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.