தமிழக அரசின் போஷாக் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா திருச்சி மாவட்டம் லால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நளினா தலைமையில் நடைபெற்றது. இதில் இயற்கை மருத்துவர் டாக்டர் வேணி மற்றும் லால்குடி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர் நீலமேகம் கலந்து கொண்டு ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. ராணி மாணவர்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் ரத்த சோகை குறித்தும் விழிப்புணர்வு ஆற்றினார். மாணவிகளிடையே நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில்
போட்டிகள் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் போட்டியில் பங்கு பெற்று பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் தயார் செய்து போட்டியில் கலந்து கொண்டனர் .மிகச் சிறந்த உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக அனைத்து மாணவிகளுக்கும் சத்து நிறைந்த கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது.தமிழாசிரியர் விஜயகுமாரி நன்றி உரையாற்றி விழா நிறைவுற்றது.